அன்று பகை… இன்று பாசம்… அண்ணன் படத்துக்கு வாழ்த்து சொன்ன வனிதா

தனது குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்றாலும் தனது அண்ணன் அருண் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள யானை படத்திற்கு வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் ரீ- எண்ட்ரி கொடுத்துள்ளார். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய வரவேற்பை அளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சி, திரைப்படங்களில் நடிப்பு, பிஸினஸ், யூடியூப் சேனல் என படு பிஸியாக இருந்து வரும் நடிகை வனிதா விஜயகுமார், குடும்ப தகராறு காரணமாக அப்பா விஜயகுமார், அண்ணன் அருண்விஜய், சகோதரிகள் ப்ரீதா, ஸ்ரீதேவி அனிதா கவிதா உள்ளிட்ட யாரிடமும் பேசுவதை நிறுத்திவட்டார்.

2 திருமணங்களை முடித்த வனிதா தற்போதும் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது குடும்பத்துடன் சேருவதற்கான முயற்சிகளில் இறங்கினாலும் இவர்கள் இவரது முயற்சிக்கு இன்னும் செவிசாய்க்கவில்லை இது குறித்து சமீபத்தில் பேசியிருந்த வனிதா, அம்மா இருந்த வரை குடும்பத்துடன் இருந்ததாகவும், அவர் இறந்த பின்பு யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.

எனது தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டாலும் அவர்கள் என்னை கண்டுகொள்வதில்லை. என் அப்பாவும் சரி சகோதரர் அருண் விஜயும் சரி என்னப்பற்றி சிந்திப்பதே இல்லை அவர் இருந்தும் எந்த பிரயோஜனமும் என்று கூறியிருந்தார். மேலும் வனிதா தற்போது வலைதளங்களில் வைரல் நாயகியாக வளம் வந்தாலும் அவர் பின்னால் சர்க்சைகளும் அணிவகுத்து வருவதை தவிர்க்க முடியவில்லை.

திருமணம் தொடர்பான சர்ச்சை ஒருபுறம் வைரைலாகி வர, பி.பி ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பகை என வனிதாவை சுற்றி சர்ச்சைகள் வட்டமிட்டுகொண்டிருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது, ஆனாலும் இந்த சர்ச்சைகள் அனைத்தையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத வனிதா தனது பாதையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது நடிகர் பிரஷாந்துடன் இவர் நடித்துள்ள அந்தகன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வனிதா, தன்னை தனது தந்தை விஜயகுமாருடன் சேர விடாமல் சில தடுப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது தங்கையின் கணவர் ஹரி இயக்கத்தில் தனது அண்ணன் நடித்துள்ள யானை படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கு வனிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கடின உழைப்பும் விடா முயற்சியும் எப்போதும் தோல்வியடையாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், அன்று அப்பா அண்ணன் என இருவரும் தன் நிலை குறித்து கண்டுகொள்ளவில்லை குறை சொன்ன வனிதா இன்று அணணன் மற்றும் தங்கை கணவர் இணைந்துள்ள படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆண்டுதோறும் மேலும் அருண்விஜயின் பிறந்த நாளுக்கு வனிதா வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.