மவுசு காட்டும் கழிவுநீர் "பீர்"… சிக்கப்பூரில் இப்போ இதுதான் டிரெண்டு!

மதுபானங்கள் பல வகை… ஒவ்வொன்றும் ஒருவகை… எது எப்படி இருந்தாலும் மதுபிரியர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து வகை மதுபானங்களையும் சுவைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் எப்போது இருக்கும் அல்லவா.

ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், ஸ்காட்லேண்டு என பல நாடுகளின் முக்கிய அடையாளங்களாகவே சில மது வகைகள் விளங்கி வருகின்றன. உலகின் முன்னணி பிராண்டுகளும் இந்த நாடுகளின் அடையாளங்களைபோல் செயல்படுகின்றன.

நல்ல சிவப்பு ஒயின் என்றால் பிரான்ஸ் நாடும், சுறுக்கென்ற வோட்கா என்றால் ரஷ்யாவும் பெயர்போன நாடுகளாக பார்க்கப்படுகின்றன. அதே போல் சற்று வழக்கத்திற்கு மாறான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானங்களும் மவுசு காட்டி வருகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை தான்.

இதுவரை உலகில் எப்படிப்பட்ட வித்தியாசமான பொருட்களில் இருந்து எல்லாம் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று பார்ப்போம்.

மங்கோலியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற தேசங்களில் குதிரை பாலில் இருந்து குமிஸ் என்ற பீர் போன்ற மதுபானம் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | மழை பெஞ்சா என்ன, நமக்கு சோறு முக்கியம்: மாஸ் காட்டிய பிரியாணி பாய்ஸ்

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இறந்த பாம்பை ஊரவைத்த ஒயினை பாரம்பரிய மதுபானமாக அருந்து வருகின்றனர். பனிப்பிரதேசமான ஆர்டிக் பகுதியில் சீகல் எனப்படும் நீர்பறவையை ஊரவைத்த பானத்தை பருகி வருகின்றனர்.

இவற்றைப்பற்றி கேட்கும்போதே சற்று திகைப்பு ஏற்படுகிறது என்று பார்த்தால் சிங்கப்பூரில் இப்போது கழிவுநீரில் தயாரிக்கப்படும் பீர் மிகப்பிரபலமாகி வருகிறது.

இந்த கழிவு நீர் பீர்ரின் பெயர் “நியூப்ரூ”சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பீர் தயாரிப்புக்காக கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு அதை பல அடுக்கு சுத்திகரிப்பு மூலம் சுத்தம் செய்து பின்னர் பீர் தயாரிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது என கூறப்படுகிறது.

இந்த கழிவு நீர் பீர் மார்கெட்டிற்கு வரும்போது நிறுவனத்தார் சற்று தயக்கத்தோடுதான் இருந்தனர். மக்களின் வரவேற்பு குறித்து கணிக்க முடியாததுபோல் இந்தது. ஆனால், மார்கெட்டிற்கு வந்ததும் வராததுமாக சிங்கப்பூர் மக்கள் இந்த கழிவு நீர் பீரை அடித்துபிடித்து வாங்கி சுவைத்து வருகின்றனர்.

 

இதனால் வெளியாகிய சில வாரங்களில் மதுபான மாக்கெட்டில் இந்த கழிவு நீர் பீர் சிறப்பு இடத்தை எட்டியது குறிப்பிடதக்கது. இது குறித்து மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தியபோது, அவர்கள் மறுசுழற்சி முறையை ஆதரிப்பதாகவும், அதன் நோக்கில் இந்த பீரின் மீது நாட்டம் கொண்டதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த கழிவு நீர் பீரின் சுவையும் அட்டகாசமாக இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: தங்க செயினை திருடும் எறும்புகள்; எந்த IPC செக்‌ஷனில் புக் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.