அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, துப்பாக்கி குண்டுகள் துளைக்காத நவீன வசதிகள் கொண்ட 200 ராணுவ வாகனங்கள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளன.
தரையிலும், தண்ணீரிலும், வனப்பகுதியிலும் எளிதாக இந்த வாகனங்களை இயக்க முடியும் என்பதோடு, வெடிகுண்டுகளை கண்டறியும் ரேடார் வசதியும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 கிலோ எடையுள்ள குண்டு வெடித்தாலும் வாகனத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.