அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் பட்டாசுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றியதில், அதிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு சோமர்செட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது டயர் தீப்பற்றி எரிவதை கவனித்த ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி அதிலிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதை, வாகன ஓட்டிகள் சிலர் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர்.