லவ் லெட்டர்… வருமான வரி துறையை பங்கமாய் கலாய்த்த சரத் பவார்!

கடந்த 2004, 2009, 2014, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து போட்டியிட்டார்.

அப்போது அவர் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டிருந்த சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க சரத் பவாருக்கு வருமான வரித் துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கப் பிரிவு என்றால் என்ன என்பது பொதுமக்கள் அவ்வளாக தெரியாது. ஆனால் இப்போது நிலைமை வேறாக உள்ளது. குக்கிராமங்களில் கூட உங்களுக்குப் பின்னால் அமலாக்கப் பிரிவு இருக்கிறதா? என மக்கள் கிண்டல் செய்கின்றனர்.

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக நாட்டின் நிர்வாகக் கட்டமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் எதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்று இப்போதெல்லாம் வெளிப்படையாகவே தெரிந்து விடுகிறது.

எனக்கு கூட வருமான வரித் துறையிடம் இருந்து இதுபோன்ற ‘லவ் லெட்டர்’ வந்துள்ளது. 2004 மக்களவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை வைத்து இப்போது விசாரிக்கின்றார்களாம்’ என்று சரத் பவார் கிண்டலாக கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.