வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை முன்கூட்டியே திறந்து வைத்ததற்காக, வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் எம்பி கதிர் ஆனந்த், காட்பாடி மேம்பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பாகவே, அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு திறந்து வைத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
வருவாய்த்துறை அளித்த இந்த புகாரின் பெயரில், மாவட்டச் செயலாளர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது கண்டித்து உறவினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு மீது காட்பாடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு இடையே அதிமுகவினர் ஒன்று கூடியதால், அப்போது அங்கிருந்த திமுக அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அது இருதரப்பினரிடையே மோதலாக வெடித்தது. இதனால் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.