Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கண்ணைக் கவரும் பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் தேனீயைக் கண்டுபிடிக்க முடியுமா? என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
இணையத்தில் நாள்தோறும் பல ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும்.
ஹங்கேரியைச் சேர்ந்த ஓவியர் ஜெர்ஜிலி துபாஸ் (Gergely Dudas) இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தை வரைந்துள்ளார். லாக்டவுனின் போது அவர் இந்த படத்தை முதலில் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
கண்ணைக் கவரும் அழகான இந்த படத்தில் பூக்கள் நிறைந்த புல்வெளியில் சூரிய ஒளியில், அழகான கார்ட்டூன் விலங்குகள் உள்ளன. உங்களால் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் தேனீயைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால்.
நெட்டிசன் ஒருவர், “நான் அதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், தேனீயை விடாமல் தேடிக்கொண்டிருந்தேன்” என்று கூறியுள்ளர். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். தேனீயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக சில குறிப்புகளைத் தருகிறோம்.
படத்தின் மேல் வலதுபுறத்தில், பூந்தொட்டி மற்றும் ரக்கூன் அருகே பாருங்கள். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். மேலும் ஒரு குறிப்பு தருகிறோம். அந்த விலங்கின் வால் அருகே இருக்கிறது பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“