மாத்தறை பிரதேச செயலாளருக்கு நிகழ்ந்த செயல் குறித்து விசாரணை

மாத்தறை பிரதேச செயலாளர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற போது, ​​ சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவித்து, சித்திரவதை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக்கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜூன் மாதம் 25 ஆம் திகதி மாத்தறை பிரதேச செயலாளர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். மேலும் அவர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக பல அரசாங்க அதிகாரிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குறிப்பாக அரச வைத்தியசாலைகளில் இவ்வாறான ஒழுக்கக்கேடான, சம்பவங்களை ஏற்படுத்தியமை குறித்து சாக்குப்போக்குக் கூற முடியாது. நோயாளர்களின் நலன் கருதி உயரிய சேவையை வழங்க உறுதி பூண்டுள்ள வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் நிருவாகிகள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் நீதி அமைச்சர் உரிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணையை மேற்கொண்டு அதனுடன் மாத்தறை பிரதேச செயலாளருக்கு நிகழ்ந்த மனிதாபிமானமற்ற முறை குறித்து விசாரணை

மாத்தறை பிரதேச செயலாளர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற போது, ​​ சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவித்து, சித்திரவதை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜூன் மாதம் 25 ஆம் திகதி மாத்தறை பிரதேச செயலாளர்இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். மேலும் அவர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக பல அரசாங்க அதிகாரிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குறிப்பாக அரச வைத்தியசாலைகளில் இவ்வாறான ஒழுக்கக்கேடான, சம்பவங்களை ஏற்படுத்தியமை குறித்து சாக்குப்போக்குக் கூற முடியாது. நோயாளர்களின் நலன் கருதி உயரிய சேவையை வழங்க உறுதி பூண்டுள்ள வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் நிருவாகிகள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் நீதி அமைச்சர் உரிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணையை மேற்கொண்டு அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறும், அந்த அறிக்கையின் பிரதி சட்டமா அதிபர், சுகாதார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக நீதியமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிராக நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறும், அந்த அறிக்கையின் பிரதி சட்டமா அதிபர், சுகாதார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதியமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.