உக்ரைனின் நாடாளுமன்றத்தில் கரகோஷங்களுக்கு மத்தியில் ஐரோப்பிய யூனியன் கொடி இன்று நிருவப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஐந்தாவது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணையும் உக்ரைனின் மிகப்பெரிய கனவு நிறைவடைய உள்ளது.
உக்ரைனின் வேட்பாளர் விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆணைக்குழு முழுவதுமாக ஆதரிப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, உக்ரைனின் வேட்பாளர் அந்தஸ்து தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் உக்ரைனின் விண்ணப்பம் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றது.
For #Ukraine to join the European Union, it is necessary to adopt a law on media, reduce the influence of oligarchs and appoint top officials to combat corruption, declared the head of the European Commission @vonderleyen. pic.twitter.com/GRGg5aP2ks
— NEXTA (@nexta_tv) July 1, 2022
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரைனின் கனவு உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், உறுப்பினர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் ஐரோப்பிய யூனியனின் கொடி உக்ரைனின் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரான்ஸ் அமைச்சரவை மறுசீரமைப்பு: அரசு செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள புதிய தகவல்
ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைய வேண்டும் என்றால், ஊடகம் தொடர்பான புதிய கொள்கையை மேற்கொள்ள வேண்டும், தன்னலக்குழுக்களின் செல்வாக்குகள் குறைக்கப்பட வேண்டும், மற்றும் ஊழலுக்கு ஏதிரான தனி உயர்மட்ட குழுவை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.