ஜப்பானில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் குவிந்தனர்.
தலைநகர் டோக்யோவில் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் ஆனந்த குளியலிட்டு வெப்பத்தை தணித்து கொண்டனர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களை அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது.