திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஞ்சா போதையில் சண்டையிட்டதை தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் தாக்கப்பட்டார்.
அந்த ஊரின் பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு கடைக்கு அருகே சிலர் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
கடையின் உரிமையாளர் ரெங்கமணி, அவர்களை கண்டித்து அனுப்பிய நிலையில், சிறிது நேரம் கழித்து நண்பர்களை அழைத்து வந்த கும்பல் ரெங்கமணியை பீர் பாட்டிலால் அடித்து சரமாரியாக தாக்கியது.
தகவலறிந்து வந்த போலீசார் 4 பேரை கைது செய்து, காயமடைந்த ரெங்கமணியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.