தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா. இவர் இன்று தனது தலைமுடியில் 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 10 நொடியில் இழுத்துச் சென்று வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.
இவர் இதற்கு முன்னதாக தனது 10-வது வயதில் 990 கிலோ எடையுள்ள காரை 112.2 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 46 நொடியில் தலைமுடியில் கயிற்றால் காரைக்கட்டி இழுத்துச் சென்று இந்தியன் ரெக்கார்டும், ஆசிய ரெக்கார்டும் பெற்றுள்ளார்.
1,410 கிலோ எடை கொண்ட வேனை தலைமுடியால் இழுத்து அரசுப்பள்ளி மாணவி சாதனை!! அசத்தல்!! pic.twitter.com/zNff62mdsW
— Dina Maalai (@DinaMaalai) July 1, 2022
இந்திய அளவில் இந்த மாணவி மட்டுமே இந்த சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாதனை புரிந்த இந்த பள்ளி மாணவியையும், அவரது பயிற்சியாளரான கராத்தே மாஸ்டர் இளையராஜா ஆகிய இருவரையும் பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.