உக்ரைனுக்கு பெருந்தொகை ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா – பென்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு


உக்ரைனுக்கான சமீபத்திய ஆயுதப் பொதிகளின் ஒரு பகுதியாக அமெரிக்கா உக்ரைனுக்கு இரண்டு NASAMS ஏவுகணை அமைப்புகள், நான்கு கூடுதல் எதிர்ப்பு பீரங்கி ரேடார்கள் மற்றும் 150,000 ரவுண்டுகள் 155 மிமீ பீரங்கி வெடிமருந்துகளை அனுப்பவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.

சுமார் 820 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவிப் பொதி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் கவனம் செலுத்திய நேட்டோ தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைனால் வியாழன் அன்று மாட்ரிட்டில் வைத்து அறிவிக்கப்பட்டது.

“பொதுமக்கள் நிரம்பிய வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம், உக்ரேனியர்கள் இந்த வாரம் மீண்டும் ஒரு மிருகத்தனமாக தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர்.

உக்ரைன் மக்ள் தங்கள் நாட்டிற்காக தொடர்ந்து போராடுகிறார்கள், அமெரிக்கா அவர்களுக்கும் அவர்களின் நியாயமான காரணத்திற்காகவும் தொடர்ந்து நிற்கிறது,” என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு பெருந்தொகை ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா - பென்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Us Sending Ukraine Two Surface Air Missile Systems

மேற்கத்திய தலைவர்கள் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் கடும் கண்டனம்

உக்ரைனின் மத்திய நகரமான கிரெமென்சுக்கில் உள்ள சன நெரிசலான வணிக வளாகத்தில் திங்களன்று ரஷ்யால் ஏவப்பட்ட Kh-22 ஏவுகணை மோதியதில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு மேற்கத்திய தலைவர்கள் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

இந்த அறிவிப்பை முறைப்படுத்தியதால் பென்டகன் வெள்ளியன்று கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது. சமீபத்திய பாதுகாப்பு உதவியில் ஹை மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புகளுக்கான (HIMARS) கூடுதல் வெடிமருந்துகளும் அடங்கும் என்று பென்டகன் கூறியது.

ரேதியோன்-டெக்னாலஜிஸ் (RTX.N) AN/TPQ-37 அமைப்புகள் மற்றும் எதிர் பீரங்கி ரேடார்கள் அனுப்பப்படும் என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னர் அனுப்பப்பட்ட AN/TPQ-36 அமைப்புகளின் செயல்திறன் வரம்பைக் காட்டிலும் மூன்று மடங்கு திறன் கொண்ட இந்த அமைப்புகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

உக்ரைனுக்கு பெருந்தொகை ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா - பென்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Us Sending Ukraine Two Surface Air Missile Systems



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.