நாட்டில் ஜி.எஸ்.டி. வருவாய் தொடர்ந்து அதிகரிப்பதாகவும், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜூன் மாதத்தில் கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாயைக் காட்டிலும் இந்தாண்டு அதே மாதத்தில் 56 சதவீதம் அதிகம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி ஏய்ப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவை அதிக ஜி.எஸ்.டி. வசூலுக்கு பங்களிப்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.