இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது.
பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2022 ஜூலை 02ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா, மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலி கடும் காற்று மற்றும் இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.