முழங்கால் வலிக்கு 40 ரூபாய் ஆயுர்வேத சிகிச்சை பெறும் தோனி!


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது முழங்கால் வலி பிரச்சினைக்காக ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தோனிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அவரிடம் மொத்தம் ரூ.40 வசூலிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகேந்திர சிங் தோனி பல மாதங்களாக முழங்கால் வலியுடன் போராடி வருகிறார், அதனை குணப்படுத்த பல்வேறு மருத்துவர்களை ஆராய்ந்து வந்தார். இந்தநிலையில், ராஞ்சியில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான லபுங் பகுதியில் வசிக்கும் வந்தன் சிங் கெர்வார் என்ற ஆயுர்வேத மருத்துவர், தோனியின் மமுழங்கால் வலிக்கு சிகிச்சை அளித்து கவனித்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

முழங்கால் வலிக்கு 40 ரூபாய் ஆயுர்வேத சிகிச்சை பெறும் தோனி! | Ms Dhoni Gets40 Rupees Ayurvedic Treatment

தனது பெற்றோருக்கு அளிக்கப்பட சிகிச்சையின் நேர்மறையான முடிவுகளைப் பார்த்த பிறகு, ராஞ்சியில் உள்ள துறவி இல்லத்தில் முழங்காலுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

கால்சியம் குறைபாடு காரணமாக முழங்கால் வலியால் அவதிப்படுவதாக மகேந்திர சிங் தோனி தன்னிடம் கூறியதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் அவரிடம் ஆலோசனைக் கட்டணமாக ரூ.20 வசூலிக்கிறேன் மற்றும் ரூ.20 மதிப்புள்ள மருந்துகளை அவருக்கு பரிந்துரைக்கிறேன்” என்று ஆயுர்வேத மருத்துவர் வந்தன் சிங் கெர்வார் கூறியுள்ளார்.

முழங்கால் வலிக்கு 40 ரூபாய் ஆயுர்வேத சிகிச்சை பெறும் தோனி! | Ms Dhoni Gets40 Rupees Ayurvedic Treatment

தோனி நான்கு நாட்களுக்கு ஒருமுறை அல்லது அதற்கு மேல் மறுத்தவரைப் பார்க்க செல்வதாகவும் கூறப்படுகிறது.

தோனி என்னைப் பார்க்க வந்தபோது, அவரை அடையாளம் காண முடியவில்லை என்று கூறிய வைத்தியர் வந்தன் சிங், மக்கள் அனைவரும் அவரை படம் பிடிக்க முயன்ற போது தான் தோனி என அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளார்.

தோனியின் பெற்றோருக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன் என்று கூறிய அவர், கடந்த 3 மாதங்களாக அவர்கள் தனது மருந்துகளை உட்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

அப்பகுதியில் மகேந்திர சிங் தோனியைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும், குழப்பத்தை தவிர்க்க, தோனி தனது காரில் உட்கார விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழங்கால் வலிக்கு 40 ரூபாய் ஆயுர்வேத சிகிச்சை பெறும் தோனி! | Ms Dhoni Gets40 Rupees Ayurvedic Treatment



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.