Russia vs Ukraine: ஸ்நேக் லேண்ட் மீது பாஸ்பரஸ் வெடிகுண்டு வீசுகிறது ரஷ்யா: உக்ரைன்

உக்ரைனில் உள்ள ஸ்நேக் ஐலாண்ட் என்ற தீவில் ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பான செயற்கைக்கோள் படமும் வெளியிடப்பட்டுள்ளது.  

ஆனால், உக்ரைனின் குற்றச்சாட்டை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அடியோடு மறுத்துள்ளது. உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதிகளை ஒழுங்கமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியில் ரஷ்யா தலையிடாது என்றும் ரஷ்யா கூறுகிறது.

கருங்கடலில் உள்ள மூலோபாய கேந்திரமான ஸ்நேக் ஐலாண்டில் இருந்து மாஸ்கோ தனது படைகளை வாபஸ் பெற முடிவு செய்த நிலையில், தீவில் பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

“இன்று சுமார் 18:00 மணியளவில்… ரஷ்ய விமானப்படை SU-30 விமானங்கள் ஸ்மினி தீவில் இரண்டு முறை பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது” என்று உக்ரேனியப் படைகள் AFP செய்தி நிறுவனத்திடம் நேற்று (2022 ஜூலை 02) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி

‘Zmiinyi island’ என்பது ஸ்நேக் தீவின் மற்றொரு பெயர். தற்போது இந்தத் தீவை விட்டு வெளியேறுவதற்கான நடவடிக்கை, அமைதிக்கான நம்பிக்கையை விதைக்கும் ஒரு சமிக்ஞை என்று ரஷ்யா கூறுகிறது.  

பாஸ்பரஸ் குண்டுகள் கொடூரமானவை. இவை பயன்படுத்தப்பட்ட பிறகு ஒரு தனித்துவமான வெள்ளை பாதையை விட்டுச்செல்பவை என்பதோடு, சர்வதேச போர் விதிகளின் கீழ் பயன்படுத்தத் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட சில இராணுவ இலக்குகளில் மட்டுமே பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்த முடியும்.

ஸ்நேக் தீவில் தடை செய்யப்பட்ட ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தியதற்கான ஆதாரமாக இந்த வெள்ளை பாதையை உக்ரைன் அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மேலும் படிக்க | ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்

உக்ரைன வெளியிட்ட ஒரு வீடியோவில், ஒரு விமானம் வெடிகுண்டுகள் வீசுவது தெரிகிறது, அதில் வெண்ணிற பாதையை விட்டுச்செல்வதும் தெரிகிறது. ரஷ்யா “தங்கள் சொந்த அறிவிப்புகளைக் கூட மதிக்கவில்லை” என்று உக்ரைன் குற்றம் சாட்டுகிறது.  

உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் உட்பட, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் போது இதேபோன்ற ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் இதற்கு முன்பும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வியாழனன்று (2022, ஜூலை 1) பேசிய ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைனில் நடந்து வரும் படையெடுப்பு காரணமாக ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் ஒரு புதிய “இரும்புத்திரை” உருவாகிக் கொண்டிருப்பதாக கூறினார்.

“இரும்புத் திரை ஏற்கனவே உருவாகிவிட்டது”, “அவர்கள் கவனமாக நடந்து கொள்ளட்டும்,” என்று அவர் ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவைப் பற்றி செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.