திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ஒரு இளைஞர் காவல்துறையினரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
பெரியார் சிலை ரவுண்டானா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த இரு இளைஞர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது ஒரு இளைஞர், போலீசாரை ஒருமையில் பேசியதோடு, அங்கிருந்த தடுப்புகளை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து அந்த இளைஞரை அடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், விசாரித்ததில், ரகளையில் ஈடுபட்டது கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பதும் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்ததால் வழக்கு ஏதும் பதியாமல் அவரது பெற்றோரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.