சுவிட்சர்லாந்திலுள்ள இந்திய உணவகத்துக்கு வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஒரு சுவாரஸ்ய தகவல்


சுவிட்சர்லாந்தில் இயங்கிவரும் இந்திய உணவகம் ஒன்று, தட்டில் வைக்கப்பட்ட சாப்பாடு முழுவதையும் காலி செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதைக் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Baden நகரில் அமைந்துள்ளது Casanova restaurant என்னும் இந்திய உணவகம். இந்த உணவகத்துக்கு வருவோர், தாங்கள் தட்டில் எடுக்கும் உணவு முழுவதையும் சாப்பிட்டு முடிக்காமல் மீதி வைத்தால் அவர்களுக்கு 5 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளது. சொல்லப்போனால், இரண்டு ஆண்டுகளாகவே அந்த உணவகத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆச்சரியம் என்னவென்றால், இந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களில் 90 சதவிகிதம்பேர் இந்த நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுதான்!

அதற்குக் காரணம் என்னவென்றால், பஃபே வகை உணவு, அதாவது நாமே தட்டை எடுத்துக்கொண்டு நமக்குத் தேவையான உணவுகளை எடுத்துக்கொள்ளும் வசதி கொண்ட உணவு முறையில், மக்கள் ஆசையில் தங்கள் தேவைக்கு அதிகமான உணவை எடுத்துக்கொள்கிறார்கள். பிறகு, அவற்றை முழுமையாக சாப்பிட முடியாமல் உணவு குப்பைத் தொட்டியைச் சென்றடைகிறது.

இப்படி உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த 5 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் என்னும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உணவக உரிமையாளரான Sulman Ghauri, ஆனால், இதுவரை யாரையும் அபராதம் செலுத்துமாறு வற்புறுத்தியதில்லை என்கிறார்.
 

சுவிட்சர்லாந்திலுள்ள இந்திய உணவகத்துக்கு வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஒரு சுவாரஸ்ய தகவல் | A Warning To Indian Restaurant Goers



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.