கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதால், சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் சிண்டேயை நீக்கியுள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேரைத் தம் பக்கம் வைத்துள்ள ஏக்நாத் சிண்டே, பாஜகவுடன் சேர்ந்து மகாராஷ்டிரத்தில் கூட்டணி அரசை அமைத்துள்ளார்.
முதலமைச்சராக ஏக்நாத் சிண்டேயும் துணை முதலமைச்சராகத் தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்றுள்ளனர்.
தங்கள் அணியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளதால் தாங்கள்தான் சிவசேனா என ஏக்நாத் சிண்டே கூறி வருகிறார்.