சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருக்கும் முன்னாள் உதவி ஆணையர் சிவக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.