நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் கருத்து… உதய்பூரை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஒருவர் கொலை?

பாஜக பிரமுகர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்ட டெய்லர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் தாக்கம் அடங்கும் முன்பு மகாராஷ்டிராவிலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் உமேஷ்(54). கால்நடைகளுக்கான மருத்து கடை நடத்தி வந்தார். உமேஷ் தனது கடையை அடைத்துவிட்டு இரவு 10 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த மற்றொரு வண்டியில் அவரின் மகன் வந்து கொண்டிருந்தார். வழியில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் உமேஷ் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அதில் ஒருவன் உமேஷ் கழுத்தில் வெட்டி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டனர்.

நுபுர் சர்மா

உமேஷை அவரின் மனைவியும் மகனும் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் முடாஷிர் அகமத், ஷாருக் பதான், அப்துல் தவுபிக், சோயப் கான், அதிப் ரஷித் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

கைதான அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். போலீஸாரின் விசாரணையில் உமேஷ், பாஜக பிரமுகர் நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவாக வாட்ஸ்ஆப் குரூப்பில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் என்று தெரிய வந்தது. அதில் தவறுதலாக இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் ஒரு குரூப்பிலும் இதனை பதிவிட்டுவிட்டது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனிடம் நடத்திய விசாரணையில் `முகமது நபியை அவமதித்தவர்கள் சாக வேண்டும்’ என்று தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உமேஷ் மகன் சங்கேத் கூறுகையில், “எனது தந்தையின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்த போது ஆட்சேபகரமான கருத்துகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.