அடுத்த வாரம் முதல் இலங்கை முற்றாக முடங்குகிறது! வெளியான தகவல்


எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு முழுமையாக முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடுகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யாவிட்டாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று  வார இறுதி தேசிய பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி குறித்த  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் இலங்கை முற்றாக முடங்குகிறது! வெளியான தகவல் | There Is No Oil Even For Essential Services

அத்தியாவசிய சேவைகளுக்கும் பாதிப்பு

பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி சுகாதாரக் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை கூட பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ளதாகவும், ஒரு தொகை எரிபொருள்  இறக்குமதி செய்யப்படும் வரை இந்நிலை தொடரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் டீசல் கப்பலொன்றும், 22ஆம் திகதி பெட்ரோல்  கப்பலொன்றும் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் இலங்கை முற்றாக முடங்குகிறது! வெளியான தகவல் | There Is No Oil Even For Essential Services



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.