பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் ஜூன் மாதத்தில் அந்நாட்டின் பணவீக்கம் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 21.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதிக பணவீக்கம், சரிந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, விரிவடைந்துவரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் தேய்மானமான நாணய மதிப்பு போன்றவற்றால் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.