திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கேட்கும் ஆந்திர அரசு… எதற்கு தெரியுமா?

ஆந்திர மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவர்களுக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச பாட புத்தகங்கள் வழங்க மொத்தம் 16 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இலவச புத்தகம் வழங்க முடியவில்லை என ஆந்திர மாநில உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு கல்லூரி முடித்துச் சென்ற மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்படும் பாடப்புத்தகங்களையே வாங்கி இந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இலவச பாடபுத்தகங்கள் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு ஆந்திர மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில், “ஆந்திராவில் மொத்தமுள்ள 452 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்க 16 கோடி தேவைப்படுகிறது.

எனவே, பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம், லட்டு உள்ளிட்டவைககளை வழங்கி வருவது போல அன்னதான பிரசாத திட்டத்தில் 16 கோடி ரூபாய் அளிக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த தேவஸ்தான கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.