நாடாளுமன்றத்தை தீயிட்டு கொளுத்திய மக்கள்! உச்சகட்ட பரபரப்பு


லிபியாவில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், நாடாளுமன்றத்திற்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

லிபியா நாட்டில் கடாபியின் இறப்புக்கு பின்னர் அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. இடைக்கால பிரதமராக அப்துல்ஹமிட் டிபீபே உள்ளார்.

ஆனால், திரிபோலி உட்பட பல நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தின் உச்சகட்டமாக அந்நாட்டின் பாராளுமன்ற கட்டிடத்திற்கு நுழைந்த மக்கள், லிபியா வாழ்க என முழக்கமிட்டனர். அதன் பின்னர் கட்டிடத்தின் முன் குப்பைகள், டயர்களை வைத்து எரித்த மக்கள், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.

நாடாளுமன்றத்தை தீயிட்டு கொளுத்திய மக்கள்! உச்சகட்ட பரபரப்பு | Parliament Fired By People In Libya

PC: AFP

அப்போது கட்டிடம் காலியாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் டிபீபே, நாடு முழுவதும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை தீயிட்டு கொளுத்திய மக்கள்! உச்சகட்ட பரபரப்பு | Parliament Fired By People In Libya

PC: Reuters

மேலும் அவர், ‘அனைத்து (அரசியல்) அமைப்புகளும் அரசாங்கம் உட்பட வெளியேற வேண்டும், தேர்தலைத் தவிர வேறு வழியில்லை.

தேர்தல்களைத் தடுக்கும் கட்சிகள் லிபிய மக்களுக்கும், வரவு செலவுத் திட்டங்களுக்கும் மூடிய எண்ணெய்க்கும் இடையூறு விளைவித்த கட்சிகளுக்கும் தெரியும், இது வாழ்க்கை நெருக்கடியை அதிகப்படுத்துவதற்கு பங்களித்தது’ எனவும் தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்றத்தை தீயிட்டு கொளுத்திய மக்கள்! உச்சகட்ட பரபரப்பு | Parliament Fired By People In Libya

PC: Twitter (@Dabaibahamid)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.