தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆட்சேபணை சான்று வழங்க 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டனர்.
பனையூரைச் சேர்ந்த முனியசாமி என்பவர் அரசு இலவசமாக வழங்கிய பட்டா நிலத்தை விற்க ஆட்சேபணை சான்றுக்கு விண்ணப்பித்தார்.
14 ஆண்டுகளுக்கு பின் விற்கலாம் என்ற அடிப்படையில் 2004ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிலத்தை, அவர் விற்க விண்ணப்பித்தார். இந்நிலையில், சான்றுக்காக லஞ்சம் கேட்கப்பட்டதை அடுத்து, முனியசாமி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாரளித்தார்.
பின்னர், அவர்கள் வழிகாட்டுதல் படி வழங்கப்பட்ட ரசாயனம் தடவிய பணத்தைப் பெற்ற வி.ஏ.ஓ. உமேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் கைது செய்யப்பட்டனர்.