ஆண் நண்பருடன் மகளை பார்த்ததால்…துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை


ஈரானில் நூராபாத்தில் அரியானா லஷ்காரி(15) அவரது தந்தை முகமது காசிம் லஷ்காரியால்(43) சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பொலிஸாரிடம் துப்பாக்கியால் தற்செயலாக சுட்டதாக தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள பூங்காவில் அடையாளம் தெரியாத ஆணுடன் மகள் அரியானா லஷ்காரியை பார்த்ததை தொடர்ந்து, தந்தை முகமது காசிம் லஷ்காரிக்கும், மகள் அரியானா லஷ்காரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நூராவில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற அரியானா லஷ்காரியை, பின் தொடர்ந்து சென்ற அவரது தந்தை முகமது காசிம் லஷ்காரி துப்பாக்கியால் தனது சொந்த மகளை சுட்டுக் கொன்றுள்ளார்.

ஆண் நண்பருடன் மகளை பார்த்ததால்...துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை | Iran Dad Shoots Daughter15 Dead But Its Accident

இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது காசிம், தனது மகளை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் இதனை செய்யவில்லை எனவும், அவளை பயமுறுத்துவதற்கே கையில் துப்பாக்கியை எடுத்து சென்றதாகவும், ஆனால் தவறுதலாக அரியானாவை சுட்டு விட்டதாகவும் பொலிசாரிடம் தெரிவித்தார்.

இதுத் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர் தெரிவித்த கருத்தில், அரியானாவின் தந்தை  சுதந்திரமான சிந்தனை மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளுடன் இணங்குவதற்கு சிரமப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் கொலை பற்றிய விவரங்களை மறைக்க ஈரானிய அரசாங்கம் முயற்சிப்பதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தார்.

ஆண் நண்பருடன் மகளை பார்த்ததால்...துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை | Iran Dad Shoots Daughter15 Dead But Its Accident

கூடுதல் செய்திகளுக்கு: கடலுக்குள் மூழ்கிய சீன கப்பல்: ஹாங்காங்கை தாக்கிய பயங்கர புயல்: உறைய வைக்கும் காட்சிகள்!

அத்துடன் லஷ்கரி போதைக்கு அடிமையானவர் என்றும், அரியானாவையும் அவரது மற்ற மகளையும் கடந்த காலங்களில் மிரட்டியதாகவும் பக்கத்து வீட்டுக்காரர் குற்றம் சாட்டினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.