விமானம், ரயில்கள், பேருந்துகளில் பயணம் செய்யும் போது உணவு கட்டணம் அதிகமாக இருக்கும்.
அது பற்றி பலேறு சமயங்களில் செய்திகள் வெளியாகினாலும் அரசு என்ன தான் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னாலும் அதில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை.
அப்படி தான் சமீபத்தில் சதாப்தி ரயிலில் சென்ற பயணி ஒருவருக்கு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டீ விலை
பால் கோவிந்த் வர்மா என்பவர் தனது டிவிட்டர் பதிவில், “டெல்லி – போபால் இடையில் செல்லும் சதாப்தி ரயிலில், டீ 20 ரூபாய் எனவும், அதற்கு வரி 50 ரூபாய் எனவும் குறிப்பிட்டு இருந்தது வைரலானது.
சேவை கட்டணம்
அந்த டிவிட்டர் பதிவுக்கு விளக்கம் அளித்த பலர், அது வரி இல்லை. டீ வழங்கியதற்கான சேவை கட்டணம் என தெரிவித்தனர். ஆனால் 20 ரூபாய் டீ வழங்கு 50 ரூபாய் சேவை கட்டணமா என்பது பலரது கேள்வியாக உள்ளது.
பதஞ்சலி
ஒரு டிவிட்டர் பயனர், சேவை கட்டணம் வரி இல்லை. அது நிறுவனத்துக்கானது. பதஞ்சலி கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் இதை நம்மால் பார்க்க முடியும். ஐஆர்சிடிசி ஒரு அரசு நிறுவனம். அது சேவை கட்டணம் வசூலித்துள்ளது. அவர்கள் மக்கள் பணத்தை சேவை என்ற பெயரில் சுரண்டி வருகிறார்கள். நல்ல வேளை நீங்கள் இதை டிவிட்டரில் பகிர்ந்துள்ளீர்கள் என தெரிவித்து இருந்தார்.
ஐஆர்சிடிசி விளக்கம்
சேவை கட்டணம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஐஆர்சிடிசி, இந்தியன் ரயில்வே 2018-ம் ஆண்டு வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையின் படி ரயில் டிக்கெட் புக் செய்யும் போது உணவை சேர்த்து புக் செய்ய வேண்டும். இல்லை என்றால் பயணத்தின் போது செய்யும் ஆர்டர்களுக்கு 50 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவை இருந்தால்
2017-ம் ஆண்டு முதல் ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் விருப்பம் இருந்தால் டிக்கெட் புக் செய்யும் போதே உணவை தேர்வு செய்து பெற்றுக்கொல்லும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் ரயில்களில் உணவு வழங்கப்படாமல் இருந்தது. இப்போது ரயில்களில் உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
IRCTC Charged Rs 50 Service Charge For Rs 20 Valued Tea. How?
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்! | IRCTC Charged Rs 50 Service Charge For Rs 20 Valued Tea. How?