இரண்டாக உடைந்து கடலில் மூழ்கிய கப்பல்! மாயமான 27 பணியாளர்கள்.. பதறவைக்கும் காட்சி


ஹொங்ஹோங்கில் சூறாவளியால் கப்பல் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியதில், மாயமான 27 பணியாளர்கள் தேடப்பட்டு வருகின்றனர். கப்பல் கடலில் மூழ்கும் அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

ஹொங்ஹோங்கிலிருந்து தென்மேற்கே 160 கடல் மைல் தொலைவில் இருந்த ஒரு பொறியியல் கப்பல், கடல் சூறாவளியால் சேதம் அடைந்து இரண்டு துண்டுகளாக உடைந்தது.

அந்த கப்பலில் இருந்த 30 பணியாளர்களில் 3 பேர் மட்டுமே ஹெலிகாப்டர் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டார். மீதமுள்ள 27 பணியாளர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை.

தென் சீனக் கடலில், மீட்புப் படையினர் அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாக ஹொங்ஹோங் அரசாங்க பறக்கும் சேவை (Hong Kong Government Flying Service) தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகரில் தோன்றிய விசித்திர மேகம்! வேற்றுகிரக வாசிகளின் வருகையா? ஆச்சரியத்தில் மக்கள் 

இரண்டாக உடைந்து கடலில் மூழ்கிய கப்பல்! மாயமான 27 பணியாளர்கள்.. பதறவைக்கும் காட்சி | Hongkong Shipwreck27 Workers Missing Typhoon

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:00 மணியளவில் (0700 GMT) மூன்று பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹொங்ஹோங் அதிகாரிகள் வெளியிட்ட பரபரப்பான மீட்பு காட்சியில், கப்பல் பணியாளர் ஒருவர் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டதைக் காட்டியது. மேலும், அந்த கப்பல் பயங்கரமான அலைகளுடன் கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் காட்சிகள் தெரிந்தன.

ஹெலிகாப்டர் வருவதற்கு முன்பு மற்ற பணியாளர்கள் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தப்பிப்பிழைத்த மூன்று பேர் தெரிவித்தனர்.

தென் சீனக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான சாபா புயல், இன்று (சனிக்கிழமை) பிற்பகல் தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் கரையைக் கடந்தது.

ஹாங்காங்கில் உள்ள மீட்புப் பணியாளர்களுக்கு உள்ளூர் நேரப்படி காலை 7:25 மணிக்கு (வெள்ளிக்கிழமை GMT 2325) தகவல் தெரிவிக்கப்பட்டது மற்றும் பின்னர் கப்பலைக் கண்டறியப்பட்டு மீட்பு பனி நடைபெற்றது.

கனேடிய நகரத்தில் வெளிப்பட்ட அசாதாரண சூறாவளி! கடற்கரைக்கு செல்வோரை அதிரவைத்த இயற்கைக் காட்சி 

இரண்டாக உடைந்து கடலில் மூழ்கிய கப்பல்! மாயமான 27 பணியாளர்கள்.. பதறவைக்கும் காட்சி | Hongkong Shipwreck27 Workers Missing Typhoon

கப்பலின் இருந் இடத்தில் மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது, 10 மீட்டர் உயர அலைகளையும் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்க பறக்கும் சேவை இரண்டு வகையான நிலையான இறக்கை விமானங்களையும் நான்கு ஹெலிகாப்டர் வகைகளையும் அனுப்பியது, சீன அதிகாரிகளும் மீட்புப் படகை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மீட்புப் பணியாளர்கள், “அதிக எண்ணிக்கையிலான மக்களைக் காணவில்லை என்பதால்” தேடுதல் பகுதியை அதிகரிப்பதாகவும், நிபந்தனைகள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் இரவு வரை நடவடிக்கையை நீட்டிப்பதாகவும் தெரிவித்தனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.