கழுத்தில் ஏற்படும் கருவளையத்தை போக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!


பொதுவாக நம்மில் பல பேருக்கு முகம் வெள்ளை நிறமாக அழகாக இருந்தாலும், கழுத்துப் பகுதி மட்டும் கருப்பு நிறம் நிறைந்ததாக இருக்கும்.

வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடத்தில் கருமையாகிவிடுகிறது.

இந்த கருமையை வேறும் சோப்பு கொண்டு போக்குவது கடினம். ஒரு சில இயற்கை பொருட்களை வைத்து எளியமுறையில் கழுத்து கருப்பினை போக்க முடியும்.

தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.   

கழுத்தில் ஏற்படும் கருவளையத்தை போக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! | The Neck Dark Ring Repellent Trending Tips

  • சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பளபளக்கும்.
  • ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும்.
  • . வெள்ளரிக்காய்யை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல செய்து கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.
  • ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்து கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவுவதால் மறைந்துவிடும்.
  • வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.
     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.