வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுமாறு புலம்பெயர் சமூகம் அழுத்தம் – வெளியாகியுள்ள தகவல்


வடக்கில் இருந்து 16 இராணுவப் படையணிகளை மீளப் பெறுவதற்கு புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தின் மீது செலுத்திய செல்வாக்கு அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலோபாய மையங்களில் நிலைகொண்டுள்ள இந்தப் படையணிகளை பராமரிப்பதற்கு அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிப்பதாக புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவித்துள்ளனர்.

373 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

அதேபோன்று, இந்தப் படையணிகளை பராமரிப்பதன் காரணமாக அரசாங்கத்தின் டொலர் கையிருப்பு குறைந்துள்ளதாகவும், இம்முறையும் 255,000 பாதுகாப்பு படையினருக்கானபாரிய தொகையான 373 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகது.

இது 2022 மற்றும் 2023 க்கு இடையில் 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக புலம்பெயர் புலிகள் அமைப்பு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த முறைபாடுகளுக்கு அரசாங்கம் பதில் அளிக்கவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.  

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுமாறு புலம்பெயர் சமூகம் அழுத்தம் - வெளியாகியுள்ள தகவல் | Pressure To Remove The Army From The North



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.