உலர் பழங்கள், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. பொட்டாசியம், இரும்பு, போலெட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடல் ஆரோக்கியத்தை மேலும் வலுப்படுத்தவும் உதவுகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த உலர் பழங்களில் சுவையான டிரை ஃப்ரூட் சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையானவை
கோதுமை மாவு – கால் கிலோ
பாதாம், முந்திரி – தலா 6
பிஸ்தா, உலர்ந்த திராட்சை – தலா 10
பேரீச்சம்பழம் – 4
நெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை
பேரீச்சம்பழம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சையை ஊற வைக்கவும். பாதாம் பருப்பை இரவில் ஊற வைத்து, தோல் நீக்கவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து பிசையவும்.
எப்போதும் சப்பாத்தி செய்வது போல, மாவை உருண்டை பிடித்து, சப்பாத்திக் கட்டையில் வைத்து விரும்பிய வடிவத்தில் தேய்க்கவும்.
அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும், அதில் உருட்டி வைத்த சப்பாத்தி மாவை போட்டு நன்கு வேகவிட்டு, இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
சுவையான டிரை ஃப்ரூட் சப்பாத்தி ரெடி.
இது சூடாகவும் சாப்பிடலாம். ஆறினாலும் சுவையாக இருக்கும். இதில் உலர் பழங்கள் சேர்த்துள்ளதால், அப்படியே சாப்பிடலாம். எந்த சைட் டிஷூம் தேவையில்லை.
இது, புரோட்டீன் சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. உங்கள் குழந்தைக்கு வாரத்துக்கு ஒருமுறை கண்டிப்பா இந்த சப்பாத்தி செய்து கொடுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“