நீதிபதிகள் பேச விரும்பினால் அரசியல்வாதிகளாக போகலாம்: மாஜி நீதிபதி சாடல்| Dinamalar

புதுடில்லி: நீதிபதிகள் தீர்ப்பினை வழங்கும் போது பேச விரும்பினால் அவர்கள் அரசியல்வாதிகளாக போகலாம் என முன்னாள் நீதிபதி எஸ். என்.திங்ரா தெரிவித்துள்ளார்.

பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, ‘டிவி’ விவாதம் ஒன்றில் பேசுகையில், முஸ்லிம் மதம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பா.ஜ., தலைமை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது. பல்வேறு முஸ்லிம் நாடுகளும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் நுாபுர் சர்மா மீது, பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கடை நடத்தி வந்த கன்னையா லால் என்பவர், நுாபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இவர் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை டில்லிக்கு மாற்றுமாறு நுாபுர் சர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

latest tamil news

இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பர்திவாலா அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘டிவி’ விவாதத்தின் போது நுாபுர் சர்மா பேசிய பொறுப்பற்ற பேச்சால் இந்த நாடே தீ பிடித்து எரிகிறது. நாடு இன்றைக்கு எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு அவரே முழு பொறுப்பு. தன்னை வழக்கறிஞர் என கூறிக்கொள்ளும் நுாபுர் சர்மா, இந்த சம்பவத்திற்காக நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். என்று தெரிவித்தனர்

இந்நிலையில் நுபர்மா குறித்த நீதிபதிகளின் கருத்தினை முன்னாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என். திங்ரா சாடியுள்ளார். அவர் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் பேசியதாவது, ‛நீதிபதிகள் தாங்கள் சொாந்த கருத்தினை வலியுறுத்தி பேச விரும்பினால் அரசியல்வாதியாக போகலாம். மேலும் எழுத்து பூர்வ உத்தரவில் நீதிபதிகள் தங்களுடைய வாய்மொழி கருத்துகளை சேர்க்கவில்லை. உச்ச நீதிமன்றம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் யாரையும் குற்றவாளியாக்க முடியாது. எப்.ஐ.ஆர்.,களை மாற்றுவதற்காக மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் உச்ச நீதிமன்றம் இது போன்ற வாய்மொழி கருத்துக்களை ஏன் வெளியிடுகிறது என்று தெரியவில்லை. நீதிபதிகள் இவ்வாறு பேசுவது, நாட்டில் உச்ச நீதிமன்றத்திற்கே அதிக அதிகாரம் உள்ளது, அதனால் நீதிபதிகள் தங்கள் விருப்பப்படி எதையும் கூறலாம், அதை யாராலும் தடுக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்துகிறது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது போல் பேசியுள்ளது நாட்டிற்கே தவறான முன்னுதாரணமாக உள்ளது.

எஸ்.என்.திங்ரா மேலும் கூறுகையில், “நுபுர் ஷர்மா ஆட்சேபனைக்குரிய எதையும் கூறியிருந்தால், அவரது கருத்துக்களில் ஏதேனும் அடிப்படை உள்ளதா அல்லது அவை வேறுவிதமாக தூண்டப்பட்டதா என்பதைச் சரிபார்ப்பது கீழ்நிலை நீதிமன்றங்களின் வேலை. அவரது கருத்து தவறானது என நிரூபிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கும். ஆனால் இந்த வழக்கில், உச்சநீதிமன்றம், தனது கருத்துக்களுடன், விசாரணை நீதிமன்றத்திற்கு ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளது.

latest tamil news

யாராவது தொலைக்காட்சி விவாதத்தில் ஏதாவது பேசினால், அவர் குற்றவாளி என்றும், அவர் நாட்டிடமும் அனைத்து அறிவிப்பாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தண்டனை வழங்கலாம் அல்லது காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பலாம் ஆனால் நீதிபதிகள் ஏன் பொதுவான பேச்சுகளை பேச வேண்டும். உச்சநீதிமன்றம் கூறிய அனைத்து விஷயங்களும் தவறானவை. இவ்வாறு முன்னாள் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என். திங்ரா தெரிவித்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.