திருமண விழாவில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி: உறவினர்கள் கதறி அழும் சோகக்காட்சி


பஞ்சாபில் திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் கதறி அழும் சோகக்காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில், பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதியில் திருமண நிகழ்ச்சியின் போது சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.

விக்ரம்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு சிறுமியும் அடங்குவர்.

இதையும் படிங்க: இரண்டாக உடைந்து கடலில் மூழ்கிய கப்பல்! மாயமான 27 பணியாளர்கள்.. பதறவைக்கும் காட்சி 

திருமண விழாவில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி: உறவினர்கள் கதறி அழும் சோகக்காட்சி | Punjab Wedding Cylinder Blast4 Killed

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிலிண்டரின் ரெகுலேட்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நால்வரின் உடலை வைத்து உறவினர்கள் கதறி அழும் காட்சி சோகத்தை அளிக்கிறது. 

இதையும் படிங்க: பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி காவலர் பதவி நீக்கம்! 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.