கராச்சி : பாகிஸ்தானை கழிவுகளை கொட்டும் இடமாக, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் கழிவுகளை, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. அமெரிக்கா, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாகிஸ்தான் கழிவுகளை இறக்குமதி செய்கிறது.இங்கு, கராச்சி, லாகூர், சியால்கோட், கைபர் பக்துன்க்வா, குஜ்ரன்வாலா உள்ளிட்ட பல இடங்களில், மறு சுழற்சி ஆலைகள் செயல்படுகின்றன.
இவை இறக்குமதி செய்யப்படும் கழிவுகளில் இருந்து, தங்கம், தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட பல உலோகங்களை பிரித்தெடுக்கின்றன.பாகிஸ்தானிலேயே ஆண்டுக்கு, 3,000 கோடி கிலோ கழிவுகள் உற்பத்தியாகின்றன. இத்துடன் எட்டு கோடி கிலோ கழிவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், பாகிஸ்தான் சர்வதேச குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கழிவுகளில், 90 சதவீதம் கடலில் கலக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் அரபிக்கடல் மாசடைந்துள்ளது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலை தொடர்ந்தால், பாகிஸ்தானில் சுற்றுச்சூழல் சீரழிந்து, யாரும் வாழ முடியாத நிலை ஏற்படும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
Advertisement