டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!

Jasprit Bumrah hits 29 as Stuart Broad concedes world record 35 runs in single over: டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஓவரில் 29 ரன்களை அடித்து, உலக சாதனைப் படைத்தார் இந்திய கேப்டன் ஐஸ்பிரித் பும்ரா. அதே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கி, டெஸ்ட் போட்டிகளில் ஓரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவர் என்ற மோசமான உலக சாதனையைப் படைத்தார் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இந்தபோட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முன்னதாக இந்திய அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதனால் இங்கிலாந்து அணி எளிதில் இந்திய அணியை சுருட்டலாம் என கணக்குப்போட்டது. ஆனால் ரிஷ்ப் பண்ட் மற்றும் ஜடேஜாவின் அதிரடியான சதங்களால், இந்திய அணி சிறப்பான ஸ்கோரை எட்டியுள்ளது.

இந்த ஆட்டத்தில், கடைசி விக்கெட்டாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு மரண பயத்தைக் காட்டி, உலக சாதனை படைத்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் போட்ட ஒரு ஓவரில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் மற்றும் 1 ரன் என மொத்தம் 29 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். அதேநேரம், பும்ரா பிரிந்து மேய்ந்ததோடு, அதே ஓவரில் எக்ஸ்ட்ரா ரன்களுடன், 35 ரன்களை விட்டுக்கொடுத்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மோசமான உலக சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

முதல் பந்து – 4

இரண்டாம் பந்து – வைடு + 5

இரண்டாம் பந்து – நோ பால் + 6

இரண்டாம் பந்து – 4

மூன்றாம் பந்து – 4

நான்காம் பந்து – 4

ஐந்தாம் பந்து – 6

ஆறாம் பந்து – 1

பும்ராவின் நேற்றைய மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்திற்கு முன், ராபின் பீட்டர்சன், ஜோ ரூட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 28 ரன்களை அதிகம் எடுத்தவர்களாக இருந்தனர். 2007 ஆம் ஆண்டு டி20 போட்டியில் யுவராஜ் சிங்கிடம் சிக்கி, ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை வாரி வழங்கியவரும் இதே ஸ்டூவர்ட் பிராட் தான். ஆனால் இந்த முறை பும்ராவிடம் இதை பிராட் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.