27 பேர் கதி என்ன?| Dinamalar

ஹாங்காங் : ஹாங்காங்கில் 30 பேர் பயணித்த கப்பல், புயலில் சிக்கியது. பெரிய அலையால் கவிழ்ந்தது. மூவர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது.

சீனாவில் சமீபத்தில் உருவான ‘சபா’ புயலால் கனமழை பெய்து வருகிறது. ஹாங்காங்கின் தென்மேற்கே 296 கி.மீ.,ல் தொழிற்சாலை கப்பல் பயணித்தது. அப்போது மணிக்கு 144 கி.மீ., வேகத்தில் வீசிய ‘சபா’ புயல் காற்றால் 10 அடிக்கு மேல் கடல் அலை எழும்பியது.இதில் சிக்கிய கப்பல் இரண்டாக உடைந்து நீரில் மூழ்கியது. தகவலறிந்த ஹாங்காங் நிர்வாகம் 2 விமானம், 4 ெஹலிகாப்டர், படகு மூலம் மீட்பு பணியை துவக்கியது. மூன்று பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது.
மோசமான வானிலை மீட்பு பணிக்கு இடையூறாக இருப்பதாக மீட்புபடையினர் தெரிவித்தனர். இதற்கிடையே ‘சபா’ புயல் குவாங்டாக் மாகாணத்தின் ஜான்ஜியாங் நகரில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.