கிளிநொச்சியில் உள்ள இலங்கை இராணுவ துருப்புக்கள் அண்மையில் (ஜூன் 28) கிளிநொச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூப்பந்து பயிற்சி பட்டறையை ஒன்றை நடாத்தினர். கிளிநொச்சி விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட இந்த செயலமர்வில் கிளிநொச்சியிளுள்ள 6 பாடசாலைகளைச் சேர்ந்த 77 மாணவர்களும் 15 ஆசிரியர்களும் கலந்துகொண்டதாக இராணுவ ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை மாணவர்களிடையே பூப்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிப் பட்டறை கிரிஷாந்த கொடஹேவா மற்றும் லெப்டினன்ட் ஏ.பி.சி. கொடஹேவா ஆகியோரால் நடத்தப்பட்டது.
பயிற்சி செயலமர்வில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் துருப்புக்கள் மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளையும் வழங்கி உபசரித்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதோடு கிரிஷாந்த கொடஹேவா அவர்களுக்கு அவரது பங்களிப்புக்காக நினைவுச் சின்னத்தையும் வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சு