அதிமுகவில் இரட்டை தலைமை சர்ச்சை உள்ளதால், அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்கு தான் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் உள்ளது என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதாரருக்குத் தான் சின்னமும், கட்சியை வழிநடத்தும் அதிகாரமும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு, அதிமுக தலைமைக் கழகத்தின் பெயரில் அழைப்பு விடுப்பது ஏற்புடையது அல்ல என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொருளாளரின் ஒப்புதல் இல்லாமல், தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது என்றும் வைத்திலிங்கம் தற்போது தெரிவித்துள்ளார்.
அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும், வருகின்ற 11-ம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ள வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி தரப்பு சர்வாதிகார மனநிலையோடு செயல்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி குறித்து வெளியான செய்தி… மறுப்பு தெரிவித்து பரபரப்பு அறிக்கை.!#YashwantSinha #jairamramesh #AIADMK #EPS #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/OYUoo87Zyr
— Seithi Punal (@seithipunal) July 3, 2022