திரிபோலி: லிபியாவில் கடந்த சில நாட்களாக அரசை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் வெள்ளிக்கிழமை லிபியாவில் ஆளும் அரசி எதிர்த்து அரசு அலுவலங்களில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கிடையில் லிபியாவில் அமைதி ஏற்பர ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து லிபியாவுக்கான ஐ. நா அதிகாரி கூறும்போது, “ அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும், ஆனால் கலவரங்கள் மற்றும் நாசகார செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று தெரிவித்தார்.
முன்னதாக 2011 ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவு எழுச்சியில் நீண்டகால சர்வாதிகாரி மோமர் கடாபியைக் கவிழ்த்துக் கொன்றதால் லிபியா குழப்பத்தில் மூழ்கியது. நாட்டின் கிழக்கை அடிப்படையாகக் கொண்ட ஜி.என்.ஏ மற்றும் போட்டி அரசாங்கத்திற்கு இடையே பிரிவினையை தூண்டியது. மேலும் புதிதாக ஆட்சியமைக்கும் அரசுக்கு எதிராக போராட்டங்களை எதிர் கட்சியினரும், கிளர்ச்சியாளர்களும் முன்னெடுக்கின்றனர்.
திரிப்போலி மீது ஹப்தார் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் லிபியா உள் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.