இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பாம்புகளை பிடித்து வந்த நபர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
மத்தியபிரதேசத்தின் இந்தோரை சேர்ந்தவர் அசோக் மெவடா (57). இவர் பாம்புகள் பிடிப்பதில் 40 ஆண்டுகளாக வல்லவராக திகழ்ந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வீடு ஒன்றுக்குள் பாம்பு புகுந்துவிட்டதாக அவருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அசோக் அங்கு விரைந்து சென்று விஷப்பாம்பை பிடித்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது.
இதையடுத்து தனது உடலில் இருந்த விஷத்தை தானே எடுத்த அசோக் வீட்டுக்கு சென்ற போது அங்கு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அசோக் மகன் ஜிதேந்திரா கூறுகையில், இதுவரை என் தந்தை ஒரு பாம்பை கூட கொன்றதில்லை.
பாம்பை பிடித்து காடு மற்றும் ஆள்நடமாட்டம் இல்லாத விட்டுவிடுவார், தற்போது அந்த பாம்பாலேயே உயிரிழந்துள்ளார் என சோகத்துடன் கூறியுள்ளார்.