நாடு முழுவதுமுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் இன்று (03) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.