புலி வந்தால் நரிகள் ஓடிவிடும் என பிரதமர் மோடியை வரவேற்க வராத தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை பாஜக விமர்சித்துள்ளது.
ஐதராபாத்தில் இரண்டு நாள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நேற்று ஐதராபாத் வந்தார். அப்போது பிரதமரை வரவேற்க தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வரவேற்க வரவில்லை.
அதே சமயத்தில், எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை நேற்று விமானம் நிலையம் சென்று சந்திரசேகர் ராவ் வரவேற்றார்.
பிரதமர் எப்போது வந்தாலும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஏன் ஓடுகிறார், ஏன் பயப்படுகிறார், ஏன் சந்திக்க விரும்பவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள தெலுங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமார், புலி வந்தால் நரிகள் ஓடிவிடும் என்று விமர்சித்துள்ளார்.