சூரியகாந்தி பூக்களில் மறைந்திருக்கும் பட்டாம்பூச்சி; 20 நொடியில கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாக மாறியிருக்கிறது. ஏனேன்றால், மறைந்திருக்கும் குதிரையைக் கண்டுபிடியுங்கள், யானையைக் கண்டுபிடியுங்கல், பறவையைக் கண்டுபிடியுங்கள் என்று ஆப்படிகல் இல்யூஷன் படங்களின் புதிர், எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சவாலானாவையாக இருப்பதால் நெட்டிசன்களை காந்தம்போல ஈர்த்து வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிப்பவை.

அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், சூரியகாந்தி பூக்களுக்கு இடையே மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுகிறது. அதிலும், அந்த பட்டாம்பூச்சியை 20 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஜீனியஸ்தான்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை ஹங்கேரிய கலைஞரான ஜெர்ஜ்லி டுடாஸ் முதலில் பகிர்ந்து கொண்டார். அவர் தனது வலைப்பதிவுகளிலும் புத்தகங்களிலும் இது போன்ற புதிர்களைக் கண்டுபிடியுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு சவால் விடுகிறார்.

சூரியகாந்தி பூக்கள் நிறைந்துள்ள இந்த படத்தில், ஒரு நரி, ஒரு வளைக்கரடி, ஒரு முயல் இருக்கிறது. ஆனால், இதில், ஒரு பட்டாம்பூச்சி மறைந்திருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். அதையே நீங்கள் 20 நொடிகளுக்குள் கண்டுபிடித்தால் ஜீனியஸ்.

நீங்கள் 20 நொடிகளுக்குள் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்துவிட்டால் பாராட்டுகள். நீங்கள் ஜீனியஸ்தான். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவ குறிப்புகளைத் தருகிறோம்.

அந்த பட்டாம்பூச்சி படத்தின் இடதுபுறத்தில் மேல் பகுதியில் உள்ளது. இப்போது கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்காக மேலும் ஒரு குறிப்பு தருகிறோம். அந்த பட்டாம்பூச்சி சூரியகாந்தி பூக்களின் மஞ்சள் வண்ண இதழைப் போலவே இருக்கும். இப்போது பட்டாம்பூச்சியைக் கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அந்த பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என்று விடையைக் கீழே தருகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.