ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தை புயல் போல தாக்கி வருகிறது. ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சியை அளிக்கின்றன. அதோடு, யதார்த்தத்தைக் கேள்விக்குட்படுத்தி, உண்மை இது அல்ல என்று எடுத்துரைக்கிறது. எல்லாமே தோற்ற மயக்கம், காட்சிப் பிழை என்று மனிதனை சிந்திக்க வைக்கிறது.
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தோன்றி முடிவில்லா குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும் போது ஆச்சரியத்தை அளிப்பவை.
அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு பூனை ஒரு பிளாஸ்டிக் கூடையின் மீது அமர்ந்திருக்கிறது. ஆனால், மறு பார்வையில் அது அந்தரத்தில் இருப்பதைப் போல தெரிகிறது. உண்மையில், இந்த பூனை உட்கார்ந்திருகிறதா? அந்தரத்தில் இருக்கிறதா? சரியாக சொல்லுங்கள்.
இப்படி தோற்ற மயக்கம் ஏற்படுவதற்கு, நம் கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையில் உள்ள செல்கள் காரணமாக இல்யூஷன் ஏற்படுகிறது.
பலரும் இந்த பூனை பிளாஸ்டிக் கூடை மீது அமர்ந்திருக்கிறது என்றும் பிறகு, அந்தரத்தில் இருக்கிறது என்று மாறி மாறி கூறி வருகின்றனர். உண்மையில், நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்பதை இங்கே கூறுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“