தங்கம் விலையானது இந்த வாரம் ஒரு வழியாக சற்றே தடுமாற்றத்தில் இருந்தது. எனினும் சர்வதேச சந்தைகள் சரிவில் காணப்பட்டது. ஆனால் இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்று வலுவானதாகவே இருந்தது.
உள்நாட்டு சந்தையில் ரூபாயின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டது. இது இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே தங்கம் இறக்குமதி வரியானது 5% அதிகரித்துள்ளது. இது 7.5%ல் இருந்து 12.5% ஆக அதிகரித்துள்ளது.
தங்கம் வாங்குவோருக்கு பெரும் ஷாக்.. இறக்குமதி வரி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்
இந்திய சந்தை நிலவரம்?
அரசின் இந்த இறக்குமதி வரியானது உள்நாட்டில் தங்கத்தின் இறக்குமதியினை குறைக்க வழிவகுக்கலாம். இது விலையேற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் நடப்பு வாரத்தில் சர்வதேச சந்தையில் விலை குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் சரியாமல் வலுவாக காணப்பட்டது.
தங்கம் விலையை தூண்டலாம்
அமெரிக்காவின் ஜிடிபி தரவு, மந்த நிலை பற்றிய பயம், பணவீக்கம் உள்ளிட்ட பலவும் தங்கம் விலையில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
குறுகிய கால நோக்கில் தங்கம் விலையில் அழுத்தம் காணப்பட்டாலும், சர்வதேச அளவிலான காரணிகள் தங்கம் விலையை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையில் அதன் தாக்கம் இருக்கலாம்.
டாலர் மதிப்பு
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, டாலரின் மதிப்பானது தங்கம் விலையினை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கலாம். தொடர்ந்து சில நாட்களாக டாலரின் மதிப்பு வலுவடைந்து காணப்படுகிறது. இது மேற்கொண்டு105.80 வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டம்
அடுத்த வாரத்தில் ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. ஐரோப்பாவின் மத்திய வங்கி கூட்டமும் தொடர்ந்து வட்டி விகிதத்தில் கவனம் செலுத்தி வருகின்றது. ஃபெடரல் வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். ஜூலை மாத கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் குறித்த அமெரிக்க தரவு
அமெரிக்காவின் விவசாயம் அல்லாத பே ரோல் தரவானது வெளியாகவுள்ளது. சம்பள பணவீக்கமும் வெளியாகவுள்ளது. இது அமெரிக்காவின் வேலை சந்தையில் எதிரொலிக்கலாம், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பண்ணை அல்லாத சம்பளம் குறித்தான தரவானது சந்தைக்கு எதிராக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் எதிர்மாறான தரவு வந்தால், அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரூபாய் Vs டாலர்
அதிகரித்துள்ள பணவீக்கம், நடப்பு கணக்கு பற்றாக்குறை, டாலருக்கான தேவை, இந்திய ரூபாயின் மதிப்பானது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். கடந்த சில வாரங்களாகவே ரூபாயின் மதிப்பானது மீண்டும் மீண்டும் வரலாற்று சரிவினைக் கண்டு வருகின்றது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே கச்சா எண்ணெய் விலையும் உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது தொடர்ந்து ரூபாய் மதிப்பினை மேற்கொண்டு அழுத்தம் காண வழிவகுக்கலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். ஆக மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையின் பெரிய மாற்றமும் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.
What will gold prices look like next week? 5 key factors to watch out for?
Gold prices are likely to be influenced by many factors including inflation, employment data, dollar-rupee value and crude oil prices in the coming week.