'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஏ.வி.எம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது. ஏ.வி.எம் நிறுவனம் தற்போது ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப் சீரிஸை உருவாக்கியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம். தமிழின் பல முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ள ஏ.வி.எம் நிறுவனம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது. 1945ல் இருந்து பட தயாரிப்பில் இயங்கி வந்த ஏ.வி.எம். 2014க்குப் பிறகு சினிமா தயாரிப்பில் இருந்து விலகி இருந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு ஏ.வி.எம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

AVM Productions - Wikipedia

ஏ.வி.எம் நிறுவனம் தற்போது ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப் சீரிஸை உருவாக்கியுள்ளது. அருண்விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸை அறிவழகன் இயக்கியிருக்கிறார். தற்போது இதன் டீசரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இன்று வரை சினிமாவுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பைரசி இணைய தளமான தமிழ் ராக்கர்ஸ் பற்றிய கதையாக இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஏ.வி.எம் நிறுவனம் இளைய தலைமுறையை கவரும் வகையில் வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கியிருப்பது பாராட்டப்பட்டு வருகிறது. இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ் விரைவில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இயக்குநர் அறிவழகன் தமிழில் ஈரம்(2009), வல்லினம் (2014), ஆறாது சினம்(2016), குற்றம் 23 (2017) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் பார்டர் என்ற உருவாகி வெளியீட்டுக்காக தயாராக உள்ளது. இதில், குற்றம் 23, பார்டர் திரைப்படங்களில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. 

– ஜான்சன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.