Samsung Galaxy: வெறும் ரூ.17,000க்கு சாம்சங்கின் 55ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாக்‌ஷிப் போன்!

Samsung Galaxy S21 FE Offer Price in India: பிரீமியம் பிரிவில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புவதுண்டு. ஆனால், அதிக விலை காரணமாக, பலரால் அத்தகைய போனை வாங்க முடியவில்லை.

இப்படி ஒரு பிரீமியம் போன் வாங்க நினைத்தால், விலை அதிகமாக இருப்பதாகத் தோன்றினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சாம்சங் கொண்டுவந்துள்ளது. சாம்சங் அதன் பிரீமியம் பிரிவு கைபேசிகளில் ஒன்றான Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனை பாதி விலைக்கு குறைவாக வழங்குகிறது. நிறுவனத்தின் இந்த திட்டத்தில், ரூ.54,999 மதிப்புள்ள போனை ரூ.17,599க்கு மட்டுமே கொடுத்து வாங்க முடியும்.

Nothing Ear (1): புதிய வடிவம் பெறும் நத்திங் இயர் (1) பட்ஸ் ஹெட்போன்!

சாம்சங் கேலக்ஸி எஸ்21 FE சலுகை விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்21 FE போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி உள்ளடக்க மெமரி, 8ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு என இரண்டு வகைகளில் வருகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.37,400 வரை தள்ளுபடியுடன் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து இந்த போனை வாங்கலாம்.

மேலும் படிக்க |
Telecom: ஓடிடி அனுபவங்களுடன் சிறந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்!

பழைய போனுக்கு முழு எக்ஸ்சேஞ்ச் கிடைத்தால், இந்த போனை ரூ.17,599க்கு மட்டுமே கொடுத்து பெற முடியும். நிறுவனத்தின் இணையதளத்தில் சலுகையைக் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 FE விவரக்குறிப்புகள்

பெயர்சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இகட்டமைப்புஅலுமினியம்இயங்குதளம்ஆண்ட்ராய்டு 12 (ஒன் யுஐ)புராசஸர்ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 2100 புராசஸர்திரை6.4” அங்குல முழுஅளவு எச்டி+ சூப்பர் அமோலெட் பேனல் / பஞ்ச் ஹோல் / கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புபின்புற கேமரா12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் + 12 வைட் ஆங்கிள் + 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ்முன்புற கேமரா32 மெகாபிக்சல்ஸ்லாட்இரண்டு 5ஜி நானே சிம்ரேம்6ஜிபி / 8ஜிபிசேமிப்பகம்128ஜிபி / 256ஜிபிஆதரவுவைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1, டைப்-சி, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஆடியோ ஜாக்சென்சார்அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, கைரேகை, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப்இடங்காட்டிஜிபிஎஸ், BEIDOU, GLONASS, GALILEO, QZSSநிறங்கள்4500mAh / 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுவிலைவெள்ளை, லாவெண்டர், கிராபைட், ஆலிவ்வெளியீடுஜனவரி 2022

சாம்சங் கேலக்ஸி எஸ்21 FE கேமரா (Samsung Galaxy S21 FE Camera)

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ், 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகிய டிரிப்பிள் கேமரா செடடப் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்புறம் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐ.பி.68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.