ஒன்பிளஸ் நிறுவனம் புதுப்புது வெர்சன்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறது.அந்தவகையில் கடந்த ஆண்டு Oneplus Nord 2 5ஜி மாடலை வெளியிட்டு இருந்தது. தற்பொழுது அந்த நிறுவனத்தின் புதிய மாடல் Oneplus Nord 2T 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த oneplus Nord 2T 5ஜி மாடல் Oneplus Nord 2 5ஜி மாடலை விட பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்பதற்கு முன்பாக OnePlus Nord 2T 5G விலை விவரத்தைப் பார்க்கலாம்.
8 ஜிபி இண்டெர்னல் மெமரி + 128 ஜிபி ஸ்டோரேஜ் – ₹28,999
12 ஜிபி இண்டெர்னல் மெமரி + 256 ஜிபி ஸ்டோரேஜ் – ₹33,999
இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Oxygen OS 12.1 மூலம் தான் செயல்படுகிறது . 6.43 இன்ச் முழு HD+ (1,080×2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. விலைக்கு ஏற்ற 90Hz refresh Rate டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC மூலம் இயக்கப்படுகிறது.முந்தைய Nord 2 5ஜி ஆனது 65W சார்ஜிங், டைமன்சிட்டி சிப்செட் ஆதரவை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் இந்த அப்கிரேடட் மாடல் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது . 50 எம்பி சோனி IMX766 முதன்மை சென்சார் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 32 எம்பி Sony IMX615 செல்பி கேமராவை இந்த சாதனம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 190 கிராமாக இருக்கும்.
இந்த மாடல் ஜூலை 5 முதல் விற்பனைக்கு கிடைக்கும். இது Gray Shadow மற்றும் Jade Fog வண்ணங்களில் வெளிவர இருக்கிறது. அமேசான், ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்ஸ், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இவை கிடைக்கும் .